சியோல்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று 2-ல் இந்தியா - கொரியா அணிகள் நேற்று சியோல் நகரில் மோதின.
முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தட்சிணேஸ்வர் சுரேஷ் 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் சூன்வூ குவானிடம் போராடி தோல்வி அடைந்தார். 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் 6-2, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் ஹியோன் சுங்கிடம் வீழ்ந்தார்.
இதனால் இந்த மோதலில் இந்திய அணி 0-2 என பின் தங்கி உள்ளது. இன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.