விளையாட்டு

எம்.எஸ்.தோனி குணமடைந்து வருகிறார்: பயிற்சியாளர் பிளெமிங் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சிஎஸ்கே அணி​யின் நட்​சத்​திர வீரர் எம்​.எஸ்​.தோனி வேக​மாக குணமடைந்து வரு​கிறார் என்று அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரி​வித்​தார்.

சென்னை எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: காயமடைந்​துள்ள எம்​.எஸ்​.தோனி வரு​கைக்​காக அனை​வரும் ஆவலுடன் எதிர்​பார்த்​துக் கொண்​டிருக்​கின்​றனர் என்​பதை நான் அறிவேன். அவர் வேக​மாக குணமடைந்து வரு​கிறார். அவருக்கு அளிக்​கப்​பட்ட சிகிச்​சை​யின் மூலம் அவர் வேக​மாக தேறி வரு​கிறார். அவர் விரை​வில் அணிக்கு வரவேண்​டும் என்​பது​தான் அனை​வரின் விருப்​ப​மாக உள்​ளது.

ஆயுஷ் மாத்ரே காயமடைந்து தொடரிலிருந்து வில​கி​விட்​டார். அவருக்​குப் பதிலாக உர்​வில் படேலை விளை​யாட வைக்​கலாமா என்ற கேள்வி​கள் அடிக்​கடி எழுகின்​றன. இருந்​த​போதும், அணி​யின் தொடக்க வரிசை​யில் ஏராள​மான அதிரடி வீரர்​கள் உள்​ளனர். எனவே, உடனடி​யாக உர்​வில் படேலை அணிக்​குள் கொண்டு வரவேண்​டிய அவசரம் இல்​லை. சிறிது காலம் காத்​திருப்​போம்.

கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் ஃபார்ம் குறித்து கவலைப்​படத் தேவை​யில்​லை. அவர் ஒரு தரமான வீரர். இளம் வயதிலேயே கேப்​டன் பதவி​யேற்று திறம்பட செய​லாற்றி வரு​கிறார். அவருக்கு அதிக அளவில் ஆதரவு இருக்​கிறது. அணிக்கு வெளி​யே​யும், உள்​ளே​யும் அவருக்கு அதிக அளவில் மரி​யாதை உள்​ளது. அது தொடரும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT