விளையாட்டு

கடைசி ஓவரில் டேவிட் மில்லரின் அதிரடியால் ஆர்சிபி அணியை வீழ்த்தியது டெல்லி

செய்திப்பிரிவு

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் பெங்​களூரு எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் நேற்று பிற்​பகலில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) - டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​கள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி​யின் கேப்​டன் அக்​சர் படேல் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். இரு அணி​யிலும் மாற்​றங்​கள் செய்​யப்​பட​வில்​லை.

முதலில் பேட் செய்த ஆர்​சிபி 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 175 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக தொடக்க வீர​ரான பில் சால்ட் 38 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​கள் விளாசி​னார். மற்​றொரு தொடக்க வீர​ரான விராட் கோலி 13 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 19 ரன்​கள் எடுத்த நிலை​யில் லுங்கி நிகிடி பந்தை டீப் கவர் திசை​யில் தூக்கி அடித்த போது பதும் நிஷங்​கா​விடம் கேட்ச் ஆனது.

இதைத் தொடர்ந்து தேவ்​தத் படிக்​கல் 18, கேப்​டன் ரஜத் பட்​டி​தார் 8, டிம் டேவிட் 26, ரோமாரியோ ஷெப்​பர்டு 1 ரன்​னில் நடையை கட்​டினர். இறு​திக்​கட்ட ஓவர்​களில் ஜிதேஷ் சர்மா 20 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன், 14 ரன்​களும், கிருணல் பாண்​டியா 10 பந்​துகளில், ஒரு சிக்​ஸருடன் 12 ரன்​களும் சேர்த்​தனர். ஆர்​சிபி அணி​யால் கடைசி 5 ஓவர்​களில் வெறும் 29 ரன்​கள் மட்​டுமே சேர்க்க முடிந்​தது. இந்த காலக்​கட்​டத்​தில் அந்த அணி 4 விக்​கெட்​களை பறி​கொடுத்​திருந்​தது.

டெல்லி அணி தரப்​பில் குல்​தீப் யாதவ், அக்​சர் படேல், லுங்கி நிகிடி ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். முகேஷ் குமார் ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​னார். 176 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த டெல்லி அணி ஒரு கட்​டத்​தில் 15 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 130 ரன்​கள் எடுத்​திருந்​தது. தொடக்க வீர​ரான கே.எல்​.​ராகுல் 34 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 57 ரன்​கள் விளாசிய நிலை​யில் கிருணல் பாண்​டியா பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

பதும் நிஷங்கா 1, கருண் நாயர் 5, சமீர் ரிஸ்வி 2 ரன்​களில் நடையை கட்​டினர். அக்​சர் படேல், டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் ஆகியோர் களத்​தில் இருந்த நிலை​யில் அந்த அணி​யின் வெற்​றிக்கு கடைசி 5 ஓவர்​களில் 46 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. புவனேஷ்வர் குமார் வீசிய 16-வது ஓவரில் 5 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​தார்.

இந்த ஓவரின் 5-வது பந்​தில் அக்​சர் படேல் தசைபிடிப்பு காரண​மாக ரிட்​டர்​யடு ஹர்ட் முறை​யில் வெளி​யேறி​னார். அக்​சர் படேல் 19 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 26 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து டேவிட் மில்​லர் களமிறங்​கி​னார். ஜோஷ் ஹேசில்​விட் வீசிய அடுத்த ஓவரில் 4 ரன்​கள் மட்​டுமே சேர்க்​கப்​பட்​டன. இதனால் டெல்லி அணிக்கு கூடு​தல் நெருக்​கடி ஏற்​பட்​டன.

புவனேஷ்வர் குமார் வீசிய 18-வது ஓவரில் டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் சிக்​ஸர் ஒன்றை பறக்​க​விட்​டார். இந்த ஓவரில் 12 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. ரஷிக் சலாம் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் பவுண்​டரிக்கு விரட்​டி​னார்.

இந்த ஓவரில் 10 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. ரோமாரியோ ஷெப்​பர்டு வீசிய கடைசி ஓவரில் டெல்லி அணி​யின் வெற்​றிக்கு 15 ரன்​கள் தேவை​யாக இருந்​தன.

முதல் பந்​தில் டேவிட் மில்​லர் ஒரு ரன்​னும் அடுத்த பந்​தில் டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் ஒரு ரன்​னும் சேர்த்​தனர். தொடர்ந்து அடுத்த 2 பந்​துகளை​யும் சிக்​ஸருக்கு பறக்​க​விட்ட டேவிட் மில்​லர் 5-வது பந்தை பவுண்​டரிக்கு விரட்ட டெல்லி அணி 19.5 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 179 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 47 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 60 ரன்​களும், டேவிட் மில்​லர் 10 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 22 ரன்​களும் விளாசினர். 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற டெல்லி அணிக்கு இது 3-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று 4-வது இடத்​துக்கு முன்​னேறியது.

ஆர்​சிபி அணிக்கு இது 2-வது தோல்​வி​யாக அமைந்​தது. அந்த அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​கள் பெற்​று பட்​டியலில்​ 2-வது இடத்​தில்​ தொடர்​கிறது.

‘ஆர்சிபி சதம்’: நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி நேற்று தனது சொந்த மைதான​மான பெங்​களூரு எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் டெல்லி அணி​யுடன் மோதி​யது. பெங்​களூரு மைதானத்​தில் ஆர்​சிபி அணிக்கு இது 100-வது ஆட்​ட​மாக அமைந்​தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் சொந்த மைதானத்​தில் 100 போட்​டிகளை விளை​யாடிய முதல் அணி என்ற வரலாற்​றுச் சாதனையை ஆர்​சிபி படைத்​துள்​ளது.

பச்சை சீருடை: சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆர்சிபி அணி கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் ஒரு ஆட்டத்தில் மட்டும் பச்சை நிற சீருடையை அணிந்து விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த சீருடை 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட, கார்பன் சமநிலை கொண்ட துணியால் உருவாக்கப்பட்டதாகும். நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணி பச்சை நிற சீருடையை அணிந்து விளையாடியது. அந்த அணி பச்சை சீருடையை அணிவது இது 16-வது முறையாகும்.

டிம் டேவிட் ‘1000’: ஆர்சிபி அணியின் நட்சத்திரமான டிம் டேவிட் நேற்று டெல்லி அணிக்கு எதிராக 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர், 7 ரன்களை எடுத்திருந்த போது ஐபிஎல் தொடரில் ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த மைல்கல் சாதனையை அவர், 560 பந்துகளில் எட்டியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த வகை சாதனையில் ஆந்த்ரே ரஸ்ஸல் 545 பந்துகளில் ஆயிரம் ரன்களை எட்டி முதலிடத்தில் உள்ளார்.

SCROLL FOR NEXT