கோப்புப்படம்
சென்னை: சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தாவூத் மெமோரியல் அணி, தமிழக காவல் துறை அணியுடன் மோதியது. இதில் தாவூத் மெமோரியல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அந்த அணி தரப்பில் மோகனராசு (3-வது நிமிடம்), சீனிவாசன் (86-வது நிமிடம்), மொஹமியோ ரிஃபான் (90+3-நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஐசிஎஃப் - டிபிஒய்சி கீழ்ப்பாக்கம் அணிகள் மோதுகின்றன.