ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியில் இலங்கை அணியின் கேப்டனாக உள்ள தசன் ஷனகா இணையவுள்ளார். 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் 28-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளன.
போட்டி தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் இலங்கை அணியின் கேப்டன் தசன் ஷனகா இணையவுள்ளார். காயம் காரணமாக ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் சாம் கரண் விலகிவிட்டார். இதையடுத்து அவருக்குப் பதிலாக ராஜஸ்தானில் அணியில் தசன் ஷனகா சேர்க்கப்பட்டுள்ளார்.