கோப்புப் படம்
சென்னை: தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து எலிஃபண்டைன் சர்க்யூட் நடத்திய சைக்ளோத்தான் நிகழ்ச்சி சென்னை அடையாறு பகுதியில் நேற்று காலை நடைபெற்றது.
சைக்ளோத்தான் போட்டியை ஓய்வுபெற்ற போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு, எலிஃபண்டைன் நிர்வாக இயக்குநர் ரமணன் பாலகங்காதரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கலா அறக்கட்டளையைச் சேர்ந்த 35 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களில் ஒருவர் 8 மாத கர்ப்பிணி ஆவார். அவர் தனது கணவருடன் பங்கேற்றார். மேலும், சென்னை முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்டோர் சைக்ளோத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சைலேந்திர பாபு பேசியதாவது: சைக்ளோத்தான் நிகழ்ச்சி மனதுக்கு மகிழ்ச்சி தரும். உற்சாகம் தரும். மேலும் இதன் மூலம் சாதனைகள் இந்திய அளவிலும் உலக அளவிலும் நிகழும். உண்மையான உடல் தகுதியோடு இருக்கக்கூடிய விளையாட்டு சைக்கிள் பந்தயம்தான். இதில் பங்கேற்கும் உடலும், மனதும் உறுதியாகும். இவ்வாறு அவர் பேசினார்.