தோனி

 
விளையாட்டு

நடப்பு சீசனில் முதல் 2 வாரங்களை தவறவிடும் தோனி: சிஎஸ்கே அறிவிப்பு

வேட்டையன்

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் இரண்டு வார காலத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தவறவிடக் கூடும் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காலின் பின் பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு பாதிப்பு காரணமாக தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் முதல் இரண்டு வார கால ஆட்டங்களை தவறவிடக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

          

44 வயதான தோனி, ஐபிஎல் கிரிக்கெட்டில் 242 இன்னிங்ஸில் 5,439 ரன்கள் எடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 248 போட்டிகளில் விளையாடி 4,865 ரன்கள் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஐந்து முறை அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

கடந்த ஐபிஎல் சீசனில் 13 இன்னிங்ஸில் 196 ரன்கள் எடுத்திருந்தார் தோனி. அவரது ஸ்ட்ரைக் ரேட் 135.17 என இருந்தது. 12 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளை அவர் விளாசி இருந்தார். இறுதி ஓவர்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 151.72 என அமைந்தது.

SCROLL FOR NEXT