விளையாட்டு

காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்: இரட்டை தங்கம் வென்றார் இனியன்

செய்திப்பிரிவு

சென்னை: காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் இலங்கை​யில் கடந்த 16-ம் தேதி தொடங்​கியது. நேற்று வரை நடை​பெற்ற இந்​தத் தொடரில் இந்​தி​யா, இலங்​கை, தென் ஆப்பிரிக்​கா, ஆஸ்​திரேலி​யா, நியூஸிலாந்​து, மாலத்​தீவு​கள், பாகிஸ்தான், வங்​கதேசம், கென்​யா, மலேசி​யா, சிங்​கப்​பூர், ஸ்காட்​லாந்​து, கனடா உள்​ளிட்ட நாடு​களைச் சேர்ந்த 96 வீரர்​கள் கலந்து கொண்​டனர்.

இதில் ரேபிட் மற்​றும் பிளிட்ஸ் ஆகிய இரண்டு பிரிவு​களி​லும் இந்திய கிராண்ட்​மாஸ்​டர் இனியன் பன்னீர்செல்வம் சாம்​பியன் பட்​டத்தை கைப்பற்றி இரட்​டைத் தங்​கம் வென்று சாதனை படைத்​துள்​ளார். தமிழகத்​தைச் சேர்ந்த இனியன் 7 சுற்​றுகள் கொண்ட இரு பிரி​விலும் தலா 6.5 புள்​ளி​களை பெற்று முதலிடம் பிடித்​தார். ரேபிட் பிரி​வில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஸ்ரீஹரி வெள்​ளிப் பதக்​க​மும், மித்​ராபா வெண்​கலப் பதக்​மும் பெற்​றனர்.

பிளிட்ஸ் பிரி​வில் ரோஹித் கிருஷ்ணா வெள்​ளிப் பதக்​க​மும், ஸ்ரீஹரி வெண்​கலப் பதக்​க​மும் கைப்​பற்​றினர். கிளாசிக்​கல் பிரிவில் மித்​ராபா சாம்​பியன் பட்​டம் வெற்​றார். இலங்கையின் ரனிந்து லியனகே வெள்​ளிப் பதக்​க​மும், இந்​தி​யா​வின் ஸ்ரீஹரி வெண்​கலப் பதக்​கமும் பெற்​றனர். 10 வயதுக்கு உட்​பட்ட சிறுவர்கள் பிரி​வில் தமிழகத்​தின் தமிழ் அமுதன் தங்​கப் பதக்​கம் வென்​றார். 12 வயதுக்கு உட்​பட்ட சிறுமியர் பிரி​வில் தமிழகத்​தின் மேஹா அரின் தங்​கப் பதக்​கம் கைப்​பற்​றி​னார்.

18 வயதுக்கு உட்​பட்ட ஓபன் பிரி​வில் தமிழகத்​தின் நன்​தீஷ் வெள்ளிப் பதக்​கம் வென்​றார். 20 வயதுக்கு உட்​பட்​டோர் ஓபன் பிரி​வில் தமிழகத்​தின் மரி​யம் பாத்​திமா வெள்​ளிப் பதக்​க​மும், ஆடவர் பிரி​வில் கிரிதன் பொக்​கரப்பு வெண்​கலப் பதக்​க​மும் வென்​றனர். இவர்​கள் 5 பேரும் ஹட்​சன் செஸ் அகாட​மி​யில் பயிற்சி பெற்​று வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT