விளையாட்டு

பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதல்வர் விஜய் இன்று விருந்து

செய்திப்பிரிவு

சென்னை: ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகைகளை முதல்வர் விஜய் உடனுக்குடன் அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, சர்வதேச அரங்கில் முத்திரை பதித்து, தமிழகத்துக்கு பெருமை சேர்த்த இவ்வீரர்களை நேரில் அழைத்து கவுரவிக்கும் வகையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் முதல்வர் விஜய் இன்று இரவு சிறப்பு விருந்து அளிக்கிறார்.

இந்த நிகழ்வில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், கமலினி, தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ், பரணிகா இளங்கோவன், அபிநயா ராஜராஜன், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் உள்ளிட்ட 35 தமிழக வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

அத்துடன், சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி வாகை சூடிய பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்கின்றனர். இவர்களுக்காக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் வழங்கி கவுரவிக்கிறார்.

SCROLL FOR NEXT