விளையாட்டு

தமிழகத்தில் அமையும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் - சிறப்பு அம்சம் என்ன?

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்​கப்​படும் என்று முதல்வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் ஜோசப் விஜய், 110 விதி​யின் கீழ் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பு: இரு சக்​கர, 4 சக்கர வாகன உற்​பத்​தி​யில் தமிழகம் முன்​னணி மாநில​மாகத் திகழ்​கிறது. பல்​வேறு வாகன உற்​பத்தி நிறு​வனங்​கள், தங்​களது புதிய வாக​னத் தொழிற்​சாலைகளை நிறு​வுவதற்​குத் தமிழகத்​தை, முதன்மை விருப்​ப​மாகக் கருதுகின்​றன.

இந்​தி​யா​வில் மோட்​டார் ஸ்போர்ட்ஸ் வாகன உற்​பத்​தி​யில், தமிழகம் முன்​னணி மாநில​மாகத் திகழ்​கிறது. இந்த மோட்​டார் ஸ்போர்ட்ஸ் உற்​பத்​திப் பிரிவு​கள் கோவை​யில் இயங்கி வரு​கிறது.

மெட்​ராஸ் இண்​டர்​நேஷனல் சர்க்​யூட் சென்​னைக்கு அரு​கில் இருங்​காட்​டுக்​கோட்​டை​யிலும், கரி மோட்​டார் ஸ்பீட் வே கோவை​யிலும் மோட்​டார் பந்​த​யத்​துக்​கான முக்​கியக் கட்​டமைப்​பு​களாக உள்​ளன.

இந்​தப் பந்தய அரங்​கு​களில், தேசிய அளவில் எஃப்​-3, எஃப்-4 கார் பந்​தயப் போட்​டிகள் நடை​பெறுகின்றன. தற்​போது மோட்​டார் வாக​னப் பந்​த​யத்​தி​லும் தமிழகம் முன்​னணி மாநில​மாகத் திகழ்கிறது. தமிழகம் வலு​வான ஆட்​டோமொபைல் உற்​பத்​திக் கட்​டமைப்​பு​களைக் கொண்​டுள்​ளது.

தமிழகத்​தில் உலக அளவி​லான மோட்​டார் வாகன கார் பந்தய விளை​யாட்​டுப் போட்​டிகளுக்​கான கார் உற்​பத்தி ஆலைகளை​யும், அதற்​குத் தேவை​யான உப தொழிற்​சாலைகளை​யும் அமைக்​கத் தேவை​யான சூழல் உள்​ளது.

உலகத்​தரம் வாய்ந்த மோட்​டார் வாகன கார் பந்தய அரங்​கு​களை அமைப்​ப​தன் மூலம், சுற்​றுலா, சிறப்பு வாகன உற்​பத்​தித் தொழிற்​சாலைகள், வேலை​வாய்ப்​பு, பொருளா​தா​ரம் மேம்பட வாய்ப்​பு​கள் உள்​ளன.

விளை​யாட்​டுச் சுற்​றுலாவை மேம்​படுத்​த​வும், தமிழக இளைஞர்​களுக்கு மோட்​டார் ஸ்போர்ட்ஸ் மீது அதி​கரித்​து​வரும் ஆர்​வத்தை ஊக்​கு​வித்​து, அவர்​களுக்​குத் தேவை​யான பயிற்​சிகள் வழங்கி தமிழகத்தை சர்​வ​தேச அளவி​லான மோட்​டார் ஸ்போர்ட்​ஸின் முக்​கிய மைய​மாக உரு​வாக்​க​வும், தமிழகத்​தில் ஒரு புதிய மோட்​டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உரு​வாக்​கப்​படும்.

இந்த நகரத்​தில் சர்​வ​தேசத் தரத்​திலான மோட்​டார் ஸ்போர்ட்ஸ் பந்​த​யத்​தடம் மற்​றும் அதற்​கான நவீன உட்​கட்​டமைப்பு வசதி​கள் மற்​றும் பயிற்சி வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்டு ஃபார்​முலா 1, ஃபார்​முலா 2, ஃபார்​முலா 3, ஃபார்​முலா 4 போன்ற சர்​வ​தேசத் தரத்​திலான போட்​டிகள் நடத்​து​வதற்​கான கட்​டமைப்​பு​கள் உரு​வாக்​கப்​படும்.

இளைஞர்​களின் மோட்​டார் ஸ்போர்ட்ஸ் திறமை​களைக் கண்​டறிந்​து, பயிற்சி மற்​றும் போட்டி வாய்ப்​பு​கள் வழங்​கி, தேசிய மற்​றும் சர்​வ​தேச அளவி​லான வீரர்​களை உரு​வாக்​கு​வதுடன், விளை​யாட்​டுச் சுற்​றுலா​வை​யும் மேம்​படுத்​தும் வகை​யில் மோட்​டார் ஸ்போர்ட்​ஸ்​ நகரம்​ அமை​யும்​. இவ்​வாறு முதல்​வர்​ விஜய்​ கூறினார்​.

SCROLL FOR NEXT