விளையாட்டு

200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல்: தங்கம் வென்று 13 வயது சீன வீராங்கனை சாதனை

செய்திப்பிரிவு

ஐச்சி-நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டியின் நீச்சல் பிரிவில் சீனாவின் 13 வயதான வீராங்கனை யூ ஜிடி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் சீன வீராங்கனை யூ ஜிடி 2 நிமிடம் 05.08 விநாடிகளில் முதலாவதாக வந்து தங்கம் வென்றார். யூ ஜிடிக்கு அடுத்த மாதம் 14 வயது நிறைவடையவுள்ளது. இதே பிரிவில் சீன வீராங்கனை சாங் மோகன் 2-வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். ஜப்பான் வீராங்கனை ஒகுசோனோ மிசா 3-வது இடத்தைக் கைப்பற்றி வெண்கலத்தைத் தட்டிச் சென்றார்.

SCROLL FOR NEXT