விளையாட்டு

ஜெகதீசன் அபாரம்: சேப்​பாக் சூப்பர் கில்​லீஸ் வெற்றி | TNPL 2026

செய்திப்பிரிவு

திண்​டுக்​கல்: டிஎன்​பிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் சேப்​பாக் சூப்​பர் கில்​லீஸ் அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் திண்​டுக்​கல் டிராகன்ஸ் அணியை வென்​றது.

இப்​போட்டி திண்​டுக்​கல் என்​பிஆர் கல்​லூரி மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய திண்​டுக்​கல் அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட் இழப்​புக்கு 126 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக ஷிவம் சிங் 25 ரன்​கள் எடுத்​தார்.

பின்​னர் விளை​யாடிய சேப்​பாக் சூப்​பர் கில்​லீஸ் அணி 16.2 ஓவர்களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 131 ரன்​கள் குவித்து வெற்றி கண்​டது.

சேப்​பாக் அணி​யின் என்​.ஜெகதீசன் அபார​மாக விளை​யாடி 58 பந்துகளில் 90 ரன்​கள்​ (8 பவுண்​டரி, 5 சிக்​ஸர்​) குவித்​து ஆட்டமிழக்காமல்​ இருந்​தார்​.

SCROLL FOR NEXT