விளையாட்டு

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: டி.குகேஷை வீழ்த்தினார் அலிரேசா ஃபிரோஜா

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி​யின் 4-வது பதிப்பு வேளச்​சேரி​யில் நடை​பெற்று வரு​கிறது. தொடரின் 2-வது நாளான நேற்று 2-வது சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன.

இதில் அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான ஹான்ஸ் நீமன், இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான நிஹால் சரினுடன் மோதி​னார். ஹான்ஸ் நீமன் வெள்ளை காய்​களு​ட​னும், நிஹால் சரின் கருப்பு காய்களுடனும் விளை​யாடி​னார்​கள். இந்த ஆட்​டம் 132-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதனால் இரு​வருக்​கும் தலா 0.5 புள்​ளி​ வழங்​கப்​பட்​டது.

உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.கு​கேஷ், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்​ட​ரான அலிரேசா ஃபிரோஜாவை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் அலிரேசா பிஃரோஜா வெள்ளை காய்​களு​ட​னும், குகேஷ் கருப்பு காய்​களு​ட​னும் விளை​யாடி​னார்​கள். பரபரப்​பாக நடை​பெற்ற இந்த மோதலில் 69-வது நகர்த்​தலின் போது அலிரேசா ஃபிரோஜா, குகேஷை வீழ்த்​தி​னார். நடப்பு தொடரில் அலிரேசா ஃபிரோஜாவுக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. முதல் சுற்றில் அவர், எம்​.பிரனேஷை தோற்​கடித்து இருந்​தார்.

ரஷ்ய கிராண்ட் மாஸ்​ட​ரான டிமிட்ரி ஆண்ட்​ரெய்​கின், இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான எம்​.பிரனேஷுடன் மோதி​னார். இந்த ஆட்டம் 18-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. உஸ்பெகிஸ்​தான் கிராண்ட் மாஸ்​ட​ரான நோதிர்​பெக் அப்​துசத்​தோரோவ், இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​ஜூன் எரிகைசியுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் 43-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது.

SCROLL FOR NEXT