சென்னை: சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் போட்டிகள் செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஏஜிஓ - இந்தியன் வங்கி அணிகள் மோதின. இதில் ஏஜிஓ அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ரக் ஷித் (26-வது நிமிடம்), ஷமீர் (46-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் தளபதி ஸ்டாலின் எஃப்சி - தாவூத் மெமோரியல் எஃப்சி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிடைந்தது. தளபதி ஸ்டாலின் அணி தரப்பில் 57-வது நிமிடத்தில் ஆகாஷ் கோல் அடித்தார். தாவூத் மெமோரியல் அணி தரப்பில் 79-வது நிமிடத்தில் கிஷோர் கோல் அடித்தார்.