சென்னை: சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் லீக் போட்டியின் லீக் ஆட்டத்தில் வருமான வரித்துறை அணி வெற்றி கண்டது. இப்போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதான வளாகத்தில் நேற்று தொடங்கியது.
தொடக்க விழா நிகழ்ச்சியில் வருமான வரித்துறை ஆணையர் ஜே.பிரேமானந்த், சுங்கத்துறை கூடுதல் ஆணையர் என்.சங்கரநாராயணன், டிஜி வைஷ்ணவா கல்லூரி முதல்வர் எஸ்.சந்தோஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் வருமான வரித்துறை, டிஜி வைஷ்ணவா கல்லூரி அணிகள் மோதின. இதில் வருமான வரித்துறை அணி 26-24, 28-26, 25-22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. வருமான வரித்துறை அணி வீரர் முத்துசாமிக்கு சிறந்த வீரருக்கான ஏ.கே.சித்திரைப்பாண்டியன் விருது வழங்கப்பட்டது.