விளையாட்டு

சாம்​பியன்ஸ் லீக் கால்​பந்து தொடர்: மெஸ்ஸி சாதனை முறியடிப்பு

செய்திப்பிரிவு

ரோம்: சாம்​பியன்ஸ் லீக் கால்​பந்து தொடரில் இத்​தாலி​யின் ரோம் நகரில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் ரியல் மாட்​ரிட் - ரோமா அணி​கள் மோதின.

இதில் ரியல் மாட்​ரிட் அணி 4-3 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. ரியல் மாட்​ரிட் அணி​யின் நட்​சத்​திர வீர​ரான கிலியன் எம்​பாப்பே 25-வது நிமிடத்​தில் கோல் அடித்து அசத்​தி​னார்.

இந்த போட்டி 27 வயதான எம்​பாப்​பேவுக்கு சாம்​பியன்ஸ் லீக் தொடரில் 100-வது ஆட்​ட​மாக அமைந்​தது. இதன் மூலம் குறைந்த வயதில் 100 போட்​டிகளில் பங்​கேற்ற வீரர் என்ற சாதனையை அவர் படைத்​தார்.

இதற்கு முன்​னர் சாம்​பியன்ஸ் லீக் தொடரில் லயோனல் மெஸ்ஸி கடந்த 2015-ம் ஆண்டு செப்​டம்​பரில் தனது 28 வயதில் 100 போட்​டிகளில் விளை​யாடியதே சாதனை​யாக இருந்​தது. இதை தற்​போது எம்​பாப்பே முறியடித்து புதிய சாதனை படைத்​துள்​ளார்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT