கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்

 
விளையாட்டு

மேற்கு இந்தியத் தீவுகள் திட்டங்களை துல்லியமாக செயல்படுத்தியது: கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பாராட்டு

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: 4-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தங்​களது திட்​டங்​களை துல்​லிய​மாக செயல்​படுத்​தி​ய​தாக இந்​திய அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

இந்​தியா - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடையி​லான 4-வது டி20 போட்டி நேற்று முன்​தினம் ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 247 ரன்​கள் குவித்​தது. கேப்​டன் ஷாய் ஹோப் 50 பந்​துகளில், 9 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 102 ரன்​கள் விளாசி மிரட்​டி​னார்.

248 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணி 19.3 ஓவர்​களில் 223 ரன்​களுக்கு ஆட்​ட​ம் இழந்​தது. சஞ்சு சாம்​சன் 23 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 56 ரன்​களும், நிதிஷ் குமார் ரெட்டி 20 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 41 ரன்​களும், திலக் வர்மா 25 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​களும் விளாசினர். அபிஷேக் சர்மா 29, இஷான் கிஷன் 6, கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 16, நமன் திர் 0, அக்​சர் படேல் 3, பிரின்ஸ் யாதவ் 0 ரன்​களில் நடையை கட்​டினர். அர்​ஷ்தீப் சிங் 5 ரன்​களில் காயம் காரண​மாக ரிட்​டயர்டு ஹர்ட் முறை​யில் வெளியேறி​னார்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தரப்​பில் கீமோ பால் 4 ஓவர்​களை வீசி 40 ரன்​களை வழங்கி 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். குடகேஷ் மோதி 2, ஷமர் ஸ்பிரிங்​கர் ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

24 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரை 2-2 என்ற கணக்​கில் சமநிலையை அடையைச் செய்​துள்​ளது. கடைசி மற்​றும் 5-வது போட்டி நாளை (17-ம் தேதி) பெங்​களூரு​வில் உள்ள சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெறுகிறது.

4-வது போட்டிக்கு பின்னர் இந்​திய அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறிய​தாவது:

பந்​து​வீச்​சில் எங்​களது லைன் மற்​றும் லெந்த் சரி​யாகச் செயல்​பட​வில்​லை. இலக்கை விரட்​டும்​போது எங்​களது அணுகு​முறை எனக்​குப் பிடித்​திருந்​தது. ஆனால், பந்​து​வீச்​சில் நாங்​கள் திட்​ட​மிட்​டபடி செயல்பட முடி​யாதது துர​திர்​ஷ்ட​வச​மானது. அந்த இடத்​தில்​தான் நாங்​கள் சற்று பின்​தங்​கி​விட்​டோம்.

எதிரணி​யினர் தங்​களது திட்​டங்​களைச் துல்​லிய​மாக செயல்​படுத்​தினர். ஆடு​கள​மும் அவர்​களுக்​குச் சற்று சாதக​மாக இருந்​தது. பந்து நன்கு எழும்​பியது. அதை அவர்​கள், சிறப்​பாகப் பயன்​படுத்​திக் கொண்​டனர். எனவே, அவர்​களுக்​குரிய பாராட்​டு​களை வழங்க வேண்​டும். இனிவரும் போட்​டிகளில் பந்​து​வீச்​சைப் பற்றி அதி​கம் சிந்​திக்க வேண்​டிய அவசி​யமில்லை என்று கருதுகிறேன். திட்​டங்​களைச் சரி​யாகச் செயல்​படுத்​து​வதும், புத்​துணர்ச்​சி​யான மனநிலை​யுடன் களமிறங்​கு​வதும்​தான் முக்​கி​யம்.

ஒவ்​வொரு போட்டி நாளி​லும் களமிறங்​கி, திட்​டங்​களைச் சரி​யாகச் செயல்​படுத்​தி, கிடைக்​கும் வாய்ப்​பு​களைப் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும். ஆட்​டத்​தின் போக்கு எங்​களுக்​குச் சாதக​மாக மாறிய​போ​தி​லும், எதிரணி​யினர் மீண்​டும் சிறப்​பாக எழுச்சி பெற்று ஆடிய விதம் பா​ராட்​டுக்​குரியது. தொடரைத் தீர்​மானிக்​கும் 5-வது டி20 போட்டி சுவாரசி​ய​மான​தாக இருக்​கும்​. இவ்​வாறு ஸ்ரேயஸ்​ ஐயர்​ கூறி​னார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT