பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர்
புதுடெல்லி: பிரேசில் - இந்தியா ஆடவர் கால்பந்து அணிகள் இடையிலான நட்புரீதியிலான சர்வதேச போட்டி வரும் அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான 25 பேர் கொண்ட பிரேசில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வினிசியஸ் ஜூனியர், ராஃபின்ஹா, மார்க்வினோஸ் ஆகியோர் அனுபவமிக்க முக்கிய வீரர்களாக உள்ளனர். இதில் மார்க்வினோஸ் கேப்டனாக தொடர்கிறார். உலகக் கோப்பை தொடரில் கோல்கீப்பர்களாக இருந்த அலிசன், எடர்சன், வெவெர்டன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஹூகோ சவுசா பிரதான கோல்கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். பெட்ரோ மோரிஸ்கோ, ஒட்டாவியோ ஆகியோர் மாற்று கோல் கீப்பர்களாக இடம் பெற்றுள்ளனர்.
பிரேசில் அணியில் 20 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடைய ஆறு வீரர்கள் உள்ளனர், அதே நேரத்தில் 8 வீரர்கள் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். 2030-ம் ஆண்டு நடைபெற உள்ள பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை கருத்தில் கொண்டு இளம் வீரர்கள் அதிகளவில் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பயிற்சியாளர் கார்லோ அன்சிலோட்டி தெரிவித்துள்ளார்.
பிரேசில் அணி விவரம்
கோல்கீப்பர்கள்: ஹூகோ சவுசா, பெட்ரோ மோரிஸ்கோ, ஒட்டாவியோ
டிஃபென்டர்கள்: ஆர்தர் டயஸ், டக்ளஸ் சான்டோஸ், கேப்ரியல் மாகல்ஹேஸ், ஜெய்ர், மார்க்வினோஸ், மாத்யூசின்ஹோ, மவுரோ ஜூனியர், விட்டோர் ரெய்ஸ், வெஸ்லி.
மிட்ஃபீல்டர்கள்: ஆந்த்ரே சான்டோஸ், ப்ரெனோ பிடன், புருனோ குய்மரேஸ், டானிலோ சான்டோஸ், டக்ளஸ் லூயிஸ், கேப்ரியல் போன்டெம்போ.
முன்கள வீரர்கள்: என்ட்ரிக், ஸ்டீபன், ஜோவோ பெட்ரோ, பெட்ரோ, ரபின்ஹா, ரேயான், சாமுவேல் லினோ, வினிசியஸ் ஜூனியர்.