வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபி

 
விளையாட்டு

வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபியை கவுன்டி போட்டிக்கு அனுப்ப திட்டம்

செய்திப்பிரிவு

மும்பை: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபியை கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவைக்க பிசிசிஐ திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பரில் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியை கருத்தில் கொண்டு வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபியை கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவைக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

நியூஸிலாந்து ஆடுகளங்கள் இங்கிலாந்து ஆடுகளங்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்தாலும், இங்கிலாந்தில் விளையாடுவது ஆகிப் நபிக்கு உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT