விளையாட்டு

முதல் டெஸ்டில் வங்கதேசம் அணி 272 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

செய்திப்பிரிவு

மிர்பூர்: வங்​கதேசம் - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி மிர்​பூரில் நடை​பெற்று வரு​கிறது. முதலில் பேட் செய்த வங்​கதேச அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 74 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 213 ரன்​கள் சேர்த்​தது. ஷத்​மான் இஸ்​லாம் 99, லிட்​டன் தாஸ் 10 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய வங்​கதேச அணி 97.4 ஓவர்​களில் 272 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தனது 3-வது சதத்தை விளாசிய ஷத்​மான் இஸ்​லாம் 105 ரன்​களில் அவுட் ஆனார். இதன் பின்​னர் களமிறங்​கிய பேட்​ஸ்​மேன்​கள் விரைவாக நடையை கட்​டினர். லிட்​டன் தாஸ் 34 ரன்​களு​டன் கடைசி வரை ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தரப்​பில் இடதுகை சுழற்​பந்து வீச்​சாளரான ஜோமல் வாரிக்​கன் 5 விக்​கெட்​களை வீழ்த்​தினார். ஷமர் ஜோசப், ஜோஸ்வா பிஷப் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். இதையடுத்து பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 48 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 134 ரன்​கள் எடுத்​தது.

ஜான் கேம்​பல் 54, பிரண்​டன் கிங் 15, கவேம் ஹாட்ஜ் 7, அமிர் ஜாங்கூ 0 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். டேக்​நரைன் சந்​தர்​பால் 43, ஜஸ்​டின் கிரீவ்ஸ் 15 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். இன்று 3-வது நாள் ஆட்​டம் நடைபெறுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT