விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: லக்சயா சென் சாம்பியன்

செய்திப்பிரிவு

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடர் சிட்னியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

நேற்று பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் லக்சயா சென்னும், ஜப்பான் வீரர் யூஷி டனகாவும் மோதினர். இதில் லக்சயா சென் 21-15, 21-11 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

SCROLL FOR NEXT