கெபர்ஹா: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கெபர்ஹாவில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் தெம்பா பவுமா 179 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 99 ரன்களுக்கு சுருண்டது. மார்கோ யான்சன் 5 விக்கெட் கள் வீழ்த்தினார். 326 ரன்கள் பின்தங்கி ஃபாலோ-ஆன் பெற்ற ஆஸ்திரேலிய அணி 4-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 2-வது இன்னிங்ஸில் 51 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.