லாகூர்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கு தயாராகும் விதமாக ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்தத் தொடரின் ஆட்டங்கள் ஜனவரி 29, 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதிகளில் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.