விளையாட்டு

2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா தடுமாற்றம்: வங்கதேச அணிக்கு வரலாற்று வெற்றி வாய்ப்பு

செய்திப்பிரிவு

டார்வின்: ஆஸ்​திரேலியா - வங்​கதேசம் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி டார்​வினில் உள்ள மாராரா மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஆஸ்​திரேலிய அணி 198 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்​கள் சேர்த்​தார். வங்​கதேச அணி தரப்​பில் ஹசன் மஹ்மூத் 6 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

இதையடுத்து விளை​யாடிய வங்​கதேச அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 110 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 351 ரன்​கள் எடுத்​தது. தன்​ஸித் ஹசன் 101, கேப்​டன் நஜ்​முல் ஹொசைன் ஷான்டோ 84 ரன்​கள் விளாசினர். மெஹிதி ஹசன் மிராஸ் 32, ஹசன் மஹ்மூத் 13 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய வங்​கதேசம் அணி 138 ஓவர்​களில் 426 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. ஹசன் மஹ்மூத் 14, தைஜூல் இஸ்​லாம் 17, எபாதத் ஹொசைன் 7 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். போராட்ட குணத்தை வெளிப்​படுத்தி மட்​டையை வீசிய மெஹிதி ஹசன் மிராஸ் 154 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோஷ் ஹேசில்​வுட் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் ஜோஷ் ஹேசில்​வுட் 6 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். மிட்​செல் ஸ்டார்க் 2 விக்​கெட்​களை​யும் பாட் கம்​மின்​ஸ், நேதன் லயன் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர். இதைத் தொடர்ந்து 228 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 53 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 161 ரன்​கள் எடுத்​தது.

தொடக்க வீரர்​களான ஜேக் வெத​ரால்டு 0, டிரா​விஸ் 17 ரன்​களில் ஹசன் மஹ்மூத் பந்​தில் நடையை கட்​டினர். மார்​னஷ் லபுஷேன் 31 ரன்​கள் எடுத்த நிலை​யில் தைஜூல் இஸ்​லாம் பந்​தில் போல்​டா​னார். ஸ்டீவ் ஸ்மித் 88 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 44 ரன்​கள் எடுத்த நிலை​யில் மெஹிதி ஹசன் மிராஸ் பந்து வீச்​சில் அவரிடமே பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். கேமரூன் கிரீன் 86 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​களும், அலெக்ஸ் கேரி 50 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 19 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

வங்​கதேச அணி தரப்​பில் மஹ்மூத் ஹசன் 2 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். தைஜூல் இஸ்​லாம், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை கைப்​பற்​றினர். கைவசம் 6 விக்​கெட்​கள் இருக்க 67 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் ஆஸ்​திரேலிய அணி இன்று 4-வது நாள் ஆட்​டத்தை எதிர்​கொள்​கிறது.

இன்​றைய ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி முதலில் பின்​தங்​கி​யுள்ள ரன்​களைச் சரிசெய்​து, அதன் பின்​னர் சவாலான இலக்கை நிர்​ண​யிப்​ப​தற்​காக பெரிய போராட்​டத்​தைச் சந்​திக்க வேண்​டி​யுள்​ளது. மறு​புறம் ஆஸ்​திரேலிய மண்​ணில் தனது முதல் டெஸ்ட் வெற்​றியை​யும், வரலாற்​றுச் சிறப்​புமிக்க மிகப்​பெரிய அளவி​லான வெற்​றியை​யும் பதிவு செய்ய வங்​கதேச அணிக்கு மேற்​கொண்டு 6 விக்​கெட்​டு​கள் மட்​டுமே தேவைப்​படு​கின்​றன.

இந்நிலையில், இன்று காலை நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் அலெக்ஸ் கேரி மற்றும் வெப்ஸ்டர் ஆகியோர் தங்களது விக்கெட்டை இழந்தனர். கிரீன் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார்.

5 கேட்ச்​கள் மிஸ்

வங்​கதேச அணிக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி​யின் பீல்​டிங் மோச​மான வகை​யில் இருந்​தது. 3-வது நாளான நேற்​றும் 3 கேட்ச்​களை அந்த அணி தவற​விட்​டது. இந்த அணி இந்த போட்​டி​யில் இது​வரை மொத்​தம் 5 கேட்ச்​களை கோட்​டை​விட்​டுள்​ளது.

300 விக்​கெட்​கள்

வங்​கதேச அணிக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யின் ஆஸ்​திரேலிய அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜோஷ் ஹேசில்​வுட் 28 ஓவர்​களை வீசி 89 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 6 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். அவர், 5-வது விக்​கெட்டை கைப்​பற்​றிய போது சர்​வ​தேச டெஸ்ட் அரங்​கில் 300 விக்​கெட்​கள் மைல்​கல் சாதனையை எட்​டி​னார். டெஸ்ட் போட்​டிகளில் 300 விக்​கெட்​டு​களை கைப்​பற்​றிய 9-வது ஆஸ்​திரேலிய வீரர் என்​ற பெரு​மை​யை ஹேசில்​வுட்​ பெற்​றார்​.

SCROLL FOR NEXT