பிரிஸ்பன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இருவடிவிலான தொடர்களுக்கும் மிட்செல் மார்ஷ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டித் தொடர் வரும் 13-ம் தேதி பெர்த் நகரிலும், டி20 தொடர் 21-ம் தேதி மெல்பர்னிலும் தொடங்குகிறது.
இதில் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் பங்கேற்ற டிராவிஸ் ஹெட், மேட் ரென்ஷா, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஷ், கூப்பர் கானொலி ஆகிய 6 பேர் ஒருநாள் போட்டிக்கான அணிக்கு தேர்வாகி உள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் டி20 அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வரும் டிசம்பர் மாதம் நியூஸிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. இந்த தொடரை கருத்தில் கொண்டு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
அணிகள் விவரம்
ஒருநாள் போட்டி அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேட் ரென்ஷா, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஷ், லியாம் ஸ்காட், கூப்பர் கானொலி, ஆலி பீக், ஆடம் ஸாம்பா, மஹ்லி பியர்ட்மேன், சேவியர் பார்ட்லெட், ஜேக் எட்வர்ட்ஸ், ஸ்பென்சர் ஜான்சன்.
டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஜேக் பிரேசர் மெக்கர்க், டிம் டேவிட், ஜோயல் டேவிஸ், நிகில் சவுத்ரி, ஜேக் எட்வர்ட், மிட்செல் ஓவன், லாக்லான் ஷா, மஹ்லி பியர்ட்மேன், ஆடம் ஸாம்பா, நேதன் எல்லிஸ், சேவியர் பார்ட்லெட், சாம் ஹார்ப்பர், ஸ்பென்சர் ஜான்சன்.