ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்​செல் ஸ்டார்க்

 
விளையாட்டு

ஆஸி vs வங்கதேச டெஸ்ட் தொடர்: இரட்டை சாதனைக்கு ஸ்டார்க் குறி

செய்திப்பிரிவு

சிட்னி: வங்​கதேச கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளது. இரு அணி​களுக்​கும் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் 13-ம் தேதி டார்​வினில் தொடங்​கு​கிறது.

இந்த டெஸ்ட் தொடரில் இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான கபில் தேவின் சாதனையை முறியடிக்க காத்​திருக்​கிறார் ஆஸ்திரேலிய அணி​யின் நட்​சத்​திர வேகப்​பந்து வீச்​சாள​ரான மிட்​செல் ஸ்டார்க்.

இடதுகை வேகப்​பந்து வீச்​சாள​ரான அவர், இது​வரை 105 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி 433 விக்​கெட்​டு​களைக் கைப்​பற்​றி​யுள்​ளார். இதன் வாயி​லாக டெஸ்ட் கிரிக்​கெட் வரலாற்​றில் அதிக விக்​கெட்​கள் வீழ்த்​தி​ய​வர்​களின் பட்​டியலில் 12-வது இடத்​தில் உள்​ளார்.

இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான கபில் தேவ் டெஸ்ட் போட்​டிகளில் 434 விக்​கெட்​டு​களைக் கைப்​பற்றி 11-வது இடத்​தில் இருக்​கிறார். வங்​கதேசத்​துக்கு எதி​ரான டெஸ்ட் தொடரின்​போது, மிட்​செல் ஸ்டார்க் 2 விக்​கெட்​டு​களைக் கைப்​பற்​றி​னால் கபில் தேவின் அதிக விக்​கெட்​டு​கள் சாதனையை முறியடிப்​பார்.

அதேவேளை​யில் ஒட்​டுமொத்​த​மாக 7 விக்​கெட்​களை வீழ்த்​தி​னால் தென் ஆப்​பிரிக்​கா​வின் முன்​னாள் வீர​ரான டேல் ஸ்டெ​யினை (439 விக்​கெட்​கள்) பின்​னுக்​குத்​தள்ளி டாப் 10-ல் இடம் பெறு​வார். ஸ்டெ​யின் தற்​போது 10-வது இடத்​தில்​ உள்​ளார்​.

SCROLL FOR NEXT