மெல்பர்ன்: எம்ஆர்எஃப் அகாடமி திட்டத்தில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய ஆடவர் வளர்ச்சி அணி அடுத்த மாதம் சென்னை வருகிறது. அந்த அணி ஆகஸ்ட் 1 முதல் 13 வரை சென்னையில் 2 நாட்கள் கொண்ட இரு போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த ஆட்டங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஆகஸ்ட் 5–6 மற்றும் 10–11-ம் தேதிகளில் நடைபெறுகின்றன.
இந்த போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய வளர்ந்து வரும் அணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்களான ஆரியன் சர்மா, ஜேசன் சங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். எம்ஆர்எஃப் அகாடமி திட்டத்தில் பங்கேற்கும் வளர்ந்து வரும் அணிக்கு, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெய்ன், அந்தோணி கிளார்க் ஆகியோர் பயிற்றுநர்களாகச் செயல்படுவார்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.