விளையாட்டு

வங்கதேச கிரிக்கெட் வீரர் நயீம் ஹசன் மீது தாக்குதல்

செய்திப்பிரிவு

டாக்​கா: வங்கதேச கிரிக்கெட் வீரர் நயீம் ஹசன் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்ட வழக்​கில் 3 போலீ​ஸார் சஸ்​பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வங்கதேச நாட்​டின் கிரிக்கெட் டெஸ்ட் அணி​யில் இடம்​பெற்று விளை​யாடி வருபவர் நயீம் ஹசன். இவர் இது​வரை 14 சர்​வ​தேச டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டிகளில் விளை​யாடி உள்​ளார். 26 வயதாகும் இவர் கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு டாக்கா விமான நிலை​யத்​தில் இருந்து வீட்​டுக்கு ஆட்​டோவில் வந்து கொண்டிருந்தார்.

அப்​போது சப்​-இன்​ஸ்​பெக்​டர் உள்பட 3 போலீ​ஸார் ஆட்​டோவை வழிமறித்து நயீம் ஹசனை கடுமை​யாக தாக்​கி​யுள்​ளனர். தான் ஒரு கிரிக்​கெட் வீரர் என்று கூறிய​போதும் அவரை போலீ​ஸார் அடித்​துள்​ளனர். மேலும், காவல் நிலை​யத்​துக்​கும்​ அழைத்​துச்​ சென்​றுள்​ளனர்​.

இந்​த விவரம்​ அறிந்​ததும்​, வங்​கதேச கிரிக்​கெட்​ வாரிய​மும்​, சங்​கமும்​ கண்​டனம்​ தெரி​வித்​தது. இதையடுத்​து சம்​பந்​தப்​பட்​ட 3 போலீ​ஸார்​ சஸ்​பெண்ட்​ செய்​யப்​பட்​டுள்​ளனர்​. இதுதொடர்​பாக விசாரணைக்​குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT