மோகி: சீனாவின் மோகி நகரில் ஆசிய ஜூனியர் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 11-1 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியைத் தோற்கடித்தது.
இந்திய அணியின் சார்பில் மானே சானிகா சந்திரகாந்த், யாதவ் கீதா, சாஹு பூஜா, யாதவ் பூர்ணிமா ஆகியோர் தலா 2 கோல்களும், சர்மா கிருஷ்ணா, தன் பினிமா, கவுர் சுக்வீர் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
ஆடவர் பிரிவில் டிரா ஆடவர் பிரிவு ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா 3-3 என்ற கோல் கணக்கில் , ஜப்பானுடன் டிரா செய்தது.
இந்தியாவின் சார்பில் கேப்டன் அன்மோல் எக்கா 2 கோல்களும் (4, 60-வது நிமிடங்கள்), ஆஷு மவுர்யா (10-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர். ஜப்பான் தரப்பில் ரியுஷின் செசாகி (11-வது நிமிடம்) ஒரு கோலும், கஸுகி நகானிஷி (48, 59-வது நிமிடங்கள்) 2 கோல்களும் அடித்தனர்.