விளையாட்டு

மிட்செல் மீது பந்தை எறிந்த அர்ஷ்தீப்புக்கு 15% அபராதம்

செய்திப்பிரிவு

துபாய்: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி நியூஸிலாந்தை வீழ்த்தி 3-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்து இருந்​தது. இந்த போட்​டி​யில் நியூஸிலாந்து அணி​யின் பேட்டிங்​கின் போது 11-வது ஓவரை இந்​திய அணி​யின் வேகப்​பந்து வீச்​சாளர் அர்ஷ்தீப் சிங் வீசி​யிருந்​தார்.

இதன் ஓவரின் 4-வது பந்தை நியூஸிலாந்து அணி​யின் பேட்ஸ்​மேன் டேரில் மிட்​செல் அடித்த போது பந்து அர்​ஷ்தீப் வசம் வந்​தது. அப்​போது பந்தை எடுத்த அவர், ஆக்​ரோஷ​மாக ஸ்டெம்​பு​களை நோக்கி வீசிய போது டேரில் மிட்​செல் மீது பலமாக பட்​டது.

          

ஸ்டெம்​பு​களை விட்டு விலகி நின்​றிருந்த போதும் அர்​ஷ்தீப் சிங், தன் மீது பந்தை எறிந்​த​தால் ஆத்​திரம் அடைந்த டேரில் மிட்​செல் கடும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். களநடு​வரும், கேப்​டன் சூர்​யகு​மார் யாதவும் தலை​யிட்டு பிரச்​சினையை முடிவுக்கு கொண்டு வந்​திருந்​தனர்.

இந்​நிலை​யில் இந்த விவ​காரத்​தில் ஐசிசி-​யின் நன்​னடத்தை விதி​களை மீறிய​தாக அர்​ஷ்தீப் சிங்​குக்கு போட்​டி​யின் ஊதி​யத்​தில் 15 சதவீதம் அபராத​மாக விதிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் ஒரு தகு​தி​யிழப்பு புள்​ளி​யும் அர்​ஷ்தீப் சிங்குக்கு வழங்​கப்​பட்​டுள்​ள​தாக ஐசிசி அறி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT