அர்​ஜுன் எரிகைசி

 
விளையாட்டு

செஸ் உலகக் கோப்பை கால் இறுதியில் அர்​ஜுன் எரிகைசி தோல்வி

செய்திப்பிரிவு

கோவா: ஃபிடே செஸ் உலகக் கோப்பை தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதன் கால் இறுதி சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​ஜுன் எரி​கைசி, சீனா​வின் வெய் யியுடன் மோதி​னார். இவர்​கள் மோதிய 2 ஆட்​டங்​களும் டிரா​வில் முடிவடைந்​திருந்​தன. இதனால் வெற்​றியை தீர்​மானிக்க நேற்று டைபிரேக்​கர் ஆட்​டம் நடத்​தப்​பட்​டது.

இதன் முதல் ஆட்​டம் 66-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. இதையடுத்து நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் 79-வது நகர்த்​தலின் போது வெய் யி, சிப்​பாயை ராணி​யாக பிரமோட் செய்​தார். இதனால் அர்​ஜுன் எரி​கைசி தோல்​வியை ஒப்​புக்​கொள்ள வேண்டிய நிலைக்கு தள்​ளப்​பட்​டார். இத்​துடன் உலக கோப்பை தொடரில் இந்​திய வீரர்​களின் செயல் திறன் முடிவுக்கு வந்​தது.

SCROLL FOR NEXT