அனஹத் சிங்

 
விளையாட்டு

உலக ஜூனியர் ஸ்கு​வாஷ் சாம்பியன்​ பட்டம் வென்ற முதல் இந்தியர்: அனஹத் சிங் சாதனை

வேட்டையன்

ஆன்டாரியோ: உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் அனஹத் சிங்.

க​ன​டா​வின் ஆன்​டாரியோ​வில் உலக ஜூனியர் ஸ்கு​வாஷ் தனி​நபர் சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்றது. இதில் மகளிர் பிரிவில் இறுதிப் போட்டியில் எகிப்தின் ருகையா சலீம் உடன் அனஹத் சிங் பலப்பரீட்சை செய்தார்.

இந்த மோதலில் உலகத் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனஹத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

உலக ஜூனியர் ஸ்கு​வாஷ் தொடரின் போட்​டி​யில் 21 வருடங்களுக்குப் பிறகு கால்​ப​தித்த இந்​தி​யர் என்ற சாதனையை அனஹத் சிங் படைத்​துள்​ளார். கடைசி​யாக 2005-ம் ஆண்டு தமிழகத்​தின் ஜோஷ்னா சின்​னப்பா இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​யிருந்​தார். உலக ஜூனியர் ஸ்கு​வாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அனஹத் படைத்துள்ளார்.

கடந்த 2011 முதல் எகிப்து நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மட்டுமே இந்த தொடரில் பட்டம் வென்று வந்தனர். அதனை இப்போது அனஹத் தகர்த்துள்ளார்.

இறுதிப் போட்டிக்கு முன்பாக அனஹத் சிங் கூறியதாவது: “நான்கு உலக ஜூனியர் போட்​டிகளில் விளை​யாடி காலிறுதி மற்​றும் அரை​யிறுதி சுற்​றுகளில் தோல்​வியடைந்​திருக்​கிறேன். அதனால் இம்​முறை இறு​திப்​போட்​டிக்கு முன்​னேறி​யிருப்​பது எனது பெற்​றோருக்​கும் பயிற்​சி​யாளர்​களுக்​கும் மிக​வும் மகிழ்ச்​சி​யளிக்​கிறது, ஆனால் இந்​தத் தொடர் இன்​னும் முடிவடைய​வில்​லை” என்​றார்​. இப்போது சாம்பியன் பட்டம் வென்று தொடரை நிறைவு செய்துள்ளார்.

SCROLL FOR NEXT