புதுடெல்லி: அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்று வரும் ஃபயர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு இந்திய வீராங்கனை அனஹத் சிங் முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற 2-வது சுற்றுப் போட்டியில் அனஹத்சிங் 11-5, 11-8, 12-14, 11-5 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை ஹேலி வார்ட்டை தோற்கடித்தார். கால் இறுதியில் அனஹத் சிங், எகிப்து வீராங்கனை சானா இப்ராஹிமை எதிர்த்து விளையாடவுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் வீர் சோட்ராணி 11-6, 7-11, 8-11, 11-1, 11-9 என்ற புள்ளிகளில் பிரான் ஸின் பாப்டிஸ்ட் மசோட்டியை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். கால் இறுதியில் வீர் சோட்ராணி, இங்கிலாந்து வீரர் டெக்லான் ஜேம்ஸை எதிர்த்து விளையாடவுள்ளார்.