லண்டன்: லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவுமுதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் இந்தியாவின் அனஹத் சிங், எகிப்தின் மரியம் மேட்வாலியை எதிர்த்து விளையாடினார்.
இதில் அனஹத் சிங் 11-3, 11-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரமித் டாண்டன் 11-6, 11-7 என்ற செட் கணக்கில் கத்தாரின் அப்துல்லா அல் தமிமியை வீழ்த்தினார்.