லண்டன்: லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் போட்டியில் இந்திய வீராங்கனை அனஹத் சிங் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், 11-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் நீலே கிலிஸுடன் மோதினார்.
39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனஹத் சிங் 13-11, 4-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 42-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ரமித்டாண்டன் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் முகமது எல்ஷார்பாகியிடம் 12-10, 11-9 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.