அமிர் ஜாங்கூ

 
விளையாட்டு

2-வது டெஸ்ட் போட்டி: சதம் விளாசி அணியை மீட்டார் அமிர் ஜாங்கூ

செய்திப்பிரிவு

சில்ஹெட்: மேற்கு இந்தியத் தீவுகள் - வங்கதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சில்ஹெட் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர்களான பிரண்டன் கிங் 9, ஜோஸ்வா டி சில்வா 12 ரன்களில் தஸ்கின் அகமது பந்தில் ஆட்டமிழந்தனர்.

கவேம் ஹாட்ஜ் 1 ரன்னில் ஹசன் மஹ்மூத் பந்தில் போல்டானார். 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் அறிமுக வீரரான கெவின் விக்ஹாமுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அமிர் ஜாங்கூ. அபாரமாக விளையாடிய அமிர் ஜாங்கூ 149 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் இது அவரது 2-வது சதமாக அமைந்தது.

மறுமுனையில் நிதானாமாக விளையாடி தனது முதல் அரை சதத்தை கடந்த கெவின் விக்ஹாம் 145 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் மஹ்மூத் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 131 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ஜஸ்டின் கிரீவ்ஸ் களமிறங்கினார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி 70 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அமிர் ஜாங்கூ 111, ஜஸ்டின் கிரீவ்ஸ் 35 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 19.5 ஓவர்களில் 77 ரன்கள் சேர்த்துள்ளது. கைவசம் 6 விக்கெட்கள் இருக்க மேற்கு இந்தியத் தீவுகள் அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT