புதுடெல்லி: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லானியர் 21-11, 21-11என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோடை நரோகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் உலக பாட்மிண்டன் தொடரில் வாகை சூடிய முதல் பிரான்ஸ் வீரர் என்ற சாதனையை அலெக்ஸ் லானியர் படைத்தார். இதேபோன்று ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரான்ஸின் தாம் கிக்குவெல், டெல்ஃபின் டெல்ரூ ஜோடி 22-20, 19-21, 21-15 என்ற செட் கணக்கில் சீனாவின் ஃபெங் யான் சே, ஹுவாங் டோங் பிங் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் கொரியாவின் அன் சே-யங் 21-17, 21-14 என்ற செட் கணக்கில் 3 முறை சாம்பியனான ஜப்பானின் அகானே யமகுச்சியை வீழ்த்தி பட்டம் வென்றார். இது அவரது 2-வது பட்டமாகும்.