விளையாட்டு

அல்​காரஸ், சபலெங்கா​வுக்கு லாரியஸ் விருது

செய்திப்பிரிவு

மாட்​ரிட்: விளை​யாட்​டின் உயர்ந்த விரு​தான லாரியஸ் விருது வழங்​கும் விழா நேற்று ஸ்பெ​யினின் மாட்​ரிட் நகரில் நடை​பெற்​றது. இதில் சிறந்த வீரர் விருது ஸ்பெ​யின் டென்​னிஸ் வீரர் கார்​லோஸ் அல்​காரஸுக்​கும் சிறந்த வீராங்​கனை விருது பெலாரஸின் அரினா சபலெங்கா​வுக்​கும் வழங்​கப்​பட்​டது.

பாரிஸ் செயின்ட் ஜெர்​மைன் (பிஎஸ்​ஜி) கால்​பந்து அணி ஆண்​டின் சிறந்த அணி​யாகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டது. அல்​காரஸ் கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் பட்​டங்​களை​யும், இந்த ஆண்டு ஜனவரி​யில் ஆஸ்​திரேலிய ஓபன் பட்​டத்​தை​யும் வென்​றிருந்​தார். உலகின் முன்​னணி வீராங்​க​னை​யான சபலெங்​கா, கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்​டத்தை வென்​றிருந்​தார்.

பிஎஸ்ஜி அணி 2025-ல் முதன்​முறை​யாக சாம்​பியன்ஸ் லீக் பட்​டத்தை வென்று சாதனை படைத்​திருந்​தது. இந்த மாதம் மாஸ்​டர்ஸ் பட்​டத்​தைத் தக்​க​வைத்​துக் கொண்ட கோல்ஃப் வீரர் ரோரி மெக்ல்​ராய் ‘ஆண்​டின் சிறந்த மீண்​டெழுந்த வீரர்’ விருதைப் பெற்​றார். பார்​சிலோனா மற்​றும் ஸ்பெ​யின் அணி​யின் நட்​சத்​திர​மான 18 வயதான லமைன்யமால், ஆண்​டின் சிறந்த இளம் விளை​யாட்டு வீரருக்​கான விருதை வென்​றார்.

ஃபார்​முலா ஒன் சாம்​பியன் லாண்டோ நோரிஸ் ‘ஆண்​டின் சிறந்த சாதனை​யாளர்’ விருதைப் பெற்​றார். ஜெர்​மன் கால்பந்து ஜாம்​ப​வான் டோனி க்ரூஸ் விளை​யாட்டு உத்வேக விருதை​யும் ஓய்வு பெற்ற ஜிம்​னாஸ்​டிக்ஸ் வீராங்கனை நாடியா கொமானெசி வாழ்​நாள் சாதனையாளர் விருதை​யும் பெற்​றனர்.

உலக ஆக் ஷன் விளை​யாட்டு வீரர் விருது அமெரிக்க ஸ்னோ​போர்டு வீராங்​கனை குளோயி கிம்​முக்கு வழங்​கப்​பட்​டது.

பிரேசிலின் கேப்​ரியல் அரா​யுஜோ மாற்றுத்திறனாளிகளுக்​கான ஆண்​டின் சிறந்த விளையாட்டு வீர​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். இந்த விருது வழங்​கும் விழாவை டென்​னிஸ் ஜாம்​ப​வான் நோவக் ஜோகோ​விச் மற்​றும் ஃப்​ரீஸ்​டைல் ஸ்கீயர் எய்லீன்கு ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

SCROLL FOR NEXT