காபூல்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் செப்டம்பர் 13 முதல் 17 வரை டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்ராகிம் ஸத்ரன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். தோள்பட்டை காயத்தில் இருந்து குணமடைந்துள்ள சீனியர் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக் அணிக்கு திரும்பி உள்ளார். அவருடன் வேகப்பந்து வீச்சாளர்களாக ஃபசல் ஹக் ஃபரூக்கி, அப்துல்லா அஹ்மத்ஸாய் ஆகியோரும் ஆல்ரவுண்டராக அஸ்மதுல்லா ஒமர்சாயும் இடம் பெற்றுள்ளனர்.
அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டரான குல்பாதின் நைப்பும் அணிக்கு திரும்பி உள்ளார். சுழற்பந்து வீச்சில் ரஷித் கான், நூர் அஹமது, நங்யால் கரோட்டி, முகமது நபி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 2-வது விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக நூர் ரஹ்மான் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி விவரம்: இப்ராகிம் ஸ்த்ரன் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ், நூர் ரஹ்மான், செதிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், குல்பாதின் நைப், முகமது நபி, ரஷித் கான், நங்யால் கரோட்டி, நூர் அஹமது, முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபரூக்கி, அப்துல்லா அஹ்மத்ஸாய், நவீன்-உல்-ஹக்.