விளையாட்டு

“ரிஸ்க் எடுக்கும் அபிஷேக் சர்மாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும்” - வருண் ஆரோன்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 47 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை தோற்​கடித்​தது. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ஹைத​ரா​பாத் அணி 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 242 ரன்​கள் குவித்​தது.

தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா 68 பந்​துகளில், 10 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 135 ரன்​கள் விளாசி மிரட்​டி​னார். 243 ரன்​கள் இலக்கை துரத்​திய டெல்லி அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 195 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்தது.

டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் சன்ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யின் பந்​து​வீச்சு பயிற்சியாள​ரான வருண் ஆரோன் கூறிய​தாவது: அபிஷேக் சர்​மா​வின் ஆட்​டத்​தில் முதிர்ச்சி எப்​போதுமே இருக்​கிறது. கடந்த இரண்டு ஆண்​டு​களாக அது வெளிப்​படை​யாகத் தெரி​கிறது.

முதிர்ச்சி இல்​லாமல் ஒரு​வ​ரால் உலகின் நம்​பர் ஒன் டி 20 பேட்​ஸ்​மே​னாக இருக்க முடி​யாது. நிச்​சய​மாக, அவர் எதிரணி மற்​றும் ஆடு​களத்​தின் தன்​மை​யைப் பொறுத்து தனது ஆட்​டத்தை மாற்​றியமைக்​கக்​கூடிய வீரர். டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்கு எதி​ராக பயன்படுத்தப்பட்ட ஆடு​களம் ஒவ்​வொரு பந்​தை​யும் கண்​மூடித்​தன​மாக அடித்து நொறுக்​கக்​கூடிய ஆடு​களம் அல்ல. எனவே எதிரணிக்​கும், ஆடு​களத்​துக்​கும் மதிப்பளிக்க வேண்​டும்.

ஷகிப் ஹுசைன், இஷன் மலிங்கா ஆகியோர் மற்ற பந்​து​அபிஷேக் அதை சரி​யாகச் செய்தார். கடந்த காலங்​களி​லும் அவர், இதை செய்துள்ளார். ஆனால் அதிக ரிஸ்க் எடுத்து விளை​யாடும் ஆட்​டத்​தில், சில நேரங்​களில் அது கைகொடுக்​காமல் போகலாம். எனவே அபிஷேக் சர்மா போன்ற வீரருக்கு அந்தச் சுதந்​திரத்தை நாம் கொடுத்தே தீர வேண்​டும். வீச்​சாளர்​களிடம் இருந்து தங்​களை வேறு​படுத்​திக் காட்டும் திறமை​களை கொண்​டுள்​ளனர்.

இஷன் மலிங்கா பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்​யக்​கூடிய​வர். டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 11, 12-வது ஓவரிலிருந்தே ரிவர்ஸ் ஸ்விங் மாற்​றத்தை பார்க்க முடிந்தது. இது எதிரணிக்கு மிக​வும் கடின​மாகி​விடும். ஏனென்​றால் வெள்ளை பந்​தில் அதன் பளபளப்​பான பகுதி எங்கே இருக்​கிறது என்​பதை அவ்​வளவு எளி​தாகக் கண்டறிய முடி​யாது. மேலும் இஷன் மலிங்​கா​வால் துல்​லிய​மாக யார்க்​கர்​களை வீச முடி​யும், அவரிடம் வேகம் குறைந்த பந்​துகளை வீசும் திறனும் உள்​ளது.

மேலும் 140 முதல் 145 கி.மீ வேகத்​துக்​கும் மேல் வீசக்​கூடிய திறமை​யும் உள்​ளது. ஷகிப் ஹுசைனும் வேகம் குறைந்த பந்​துகளை சிறப்​பாக வீசக்​கூடிய​வர். சாதாரண பந்தை வீசும் அதே வேகத்​தில் கையைச் சுழற்றி ஆஃப்​-ஸ்​பின்​னில் பந்து திரும்​புவதைப்​போல வேகம் குறைந்த பந்​தில் திருப்​பு​கிறார். அதேவேளை​யில் யார்க்​கர்​களை​யும் சரி​யாக வீசுகிறார், 140 கி.மீ வேகத்​திற்கு மேலும் பந்​து​ வீசும் திறன் அவரிடம் உள்​ளது.

கிரிக்​கெட் விளை​யாட்டு செல்​லும் திசையை​யும், ஐபிஎல் முன்​னேறி வரும் விதத்​தை​யும் பார்த்​தால், பந்து வீச்​சாளர்​கள் தங்​களது வேகத்​தில் மாற்​றங்​களை கொண்​டிருப்​பது அவசி​யம். 140-145 கி.மீ வேகத்​திலிருந்து அப்​படியே 107 கி.மீ வரை வேகத்​தைக் குறைத்து வீசத் தெரிந்​திருக்​க வேண்டும்​. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT