விளையாட்டு

2-வது சுற்றில் ஆகர்ஷி காஷ்யப்

செய்திப்பிரிவு

மார்க்ஹாம்: கனடாவின் மார்க்ஹாம் நகரில் கனடா ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் அனா டத்ரனோவாவையும், தன்யா ஹேம்நாத் 21-16 21-18 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் திஷா குப்தாவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், உடற்தகுதி பிரச்சினை காரணமாக விலகினார்.

SCROLL FOR NEXT