வானதி 
விளையாட்டு

ஜெர்மனியில் நடக்கும் சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தேவகோட்டை மாற்றுத்திறனாளி மாணவி

செய்திப்பிரிவு

காரைக்குடி: ஜெர்மனியில் நடக்கும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேவகோட்டை மாற்றுத்திறனாளி மாணவி தேர்வாகியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்கோட்டையைச் சேர்ந்த தம்பதி காளிமுத்து - மாரி ஆகியோரது மகள் வானதி (17). மாற்றுத்திறனாளியான இவர், காரைக்குடி அருகேயுள்ள அமராவதி புதூர் நிர்மல் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து வானதி உட்பட 16 பேர் தேர்வு செய்யப் பட்டனர். மேலும் தடகளப் போட் டிக்கு பெண்கள் பிரிவில் இந்திய அளவில் தேர்வான நான்கு பேரில் வானதியும் ஒருவர்.

சிறப்பு ஒலிம் பிக் போட்டி ஜெர்மனி நாட்டில் ஜூன் 17 முதல் ஜூன் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 117 நாடுகளைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இதில் வானதி இந்தியா சார்பில் தடகளப் பிரிவில் 400 மீ. ஓட்டம் தொடர் ஓட்டத்தில் பங்கேற்கிறார்.

மாணவி வானதியை சிறப்பு பள்ளி தாளாளர் ரெஜினா, பாதிரியார் வின்சென்ட், பயிற்சியாளர் கார்த்திக் உள்ளிட்டோர் பாராட்டினர்.

பயிற்சியாளர் கார்த்திக் கூறுகை யில், சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு ஓராண்டாக தேர்வு போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து தேசிய அளவில் குஜராத் மாநிலத்தில் 2 பயிற்சி முகாம்கள், புதுடெல்லியில் ஒரு பயிற்சி முகாமை நடத்தி வீரர்களை தேர்வு செய்தனர் என்று கூறினர்.

SCROLL FOR NEXT