ஐசிசி பகிர்ந்த சிறப்பு போஸ்டர் 
விளையாட்டு

WTC Final | ஐசிசி பகிர்ந்த ரோகித் சர்மாவின் சிறப்பு போஸ்டர்

செய்திப்பிரிவு

துபாய்: வரும் ஜூன் 7-ம் தேதி இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் படம் இடம்பெற்றுள்ள போஸ்டர் ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இந்தப் போட்டி இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணி வீரர்களும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் நோக்கில் இங்கிலாந்தில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணி கடந்த 2021-ல் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் விளையாடி இருந்தது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது. இந்திய அணியை அப்போது விராட் கோலி வழிநடத்தி இருந்தார்.

“கடந்த 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை விடவும் தற்போது இந்திய அணி சிறப்பாக செயல்படுமா? சிவப்பு பந்து கிரிக்கெட் மீட்சிக்கான நேரம் இது” என்ற கேப்ஷனுடன் ஐசிசி இந்தப் போஸ்டரை பகிர்ந்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ், அக்சர் படேல், ஜெயதேவ் உனத்கட், அஸ்வின், உமேஷ் யாதவ், புஜாரா ஆகியோர் இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT