தோனி 
விளையாட்டு

சகாப்தம் | 250 ஐபிஎல் போட்டிகளில் களம் கண்ட முதல் வீரர் தோனி

செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் விளையாடுவதன் 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி.

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்தப் போட்டி நேற்று நடைபெற இருந்தது. மழை காரணமாக இன்று நடைபெறுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி இதுவரை...

  • 249 போட்டிகள்
  • 5082 ரன்கள்
  • 39.09 சராசரி
  • 135.96 ஸ்ட்ரைக் ரேட்
  • 24 அரைசதங்கள்
  • 349 பவுண்டரிகள்
  • 239 சிக்ஸர்கள்
  • 137 கேட்சுகள்
  • 41 வெளியேற்றங்கள்
  • கேப்டனாக 4 கோப்பைகள்
  • கேப்டனாக 9 இறுதிப் போட்டிகள்
  • வீரராக 10 இறுதிப் போட்டிகள்
SCROLL FOR NEXT