மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியே தனது கடைசி போட்டி என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து அறிவித்த ராயுடுவை மனதார வாழ்த்தி உள்ளார் சுரேஷ் ரெய்னா. இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இணைந்து விளையாடியவர்கள்.
37 வயதான ராயுடு இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியவர். கடைசியாக கடந்த 2019-ல் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை மொத்தம் 203 போட்டிகளில் விளையாடி உள்ளார். 4,329 ரன்கள் குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் பேட் செய்துள்ளார். கடந்த 2018 முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் ராயுடு, 89 ஐபிஎல் போட்டிகளில் 1,913 ரன்கள் குவித்துள்ளார்.
“வாழ்த்துகள் சகோதரரே. உங்களுடன் களத்தில் ஒன்றாக விளையாடியதை எண்ணி பெருமை கொள்கிறேன். களத்திற்கு வெளியேயும், உள்ளேயும் உங்களை நன்கு அறிவேன். கிரிக்கெட் விளையாட்டிற்கு நீங்கள் கொடுத்துள்ள மறக்க முடியாத மகத்தான பங்களிப்பு என்றென்றும் அழியா முத்திரையாக பதிந்து இருக்கும். அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என ரெய்னா ட்வீட் செய்துள்ளார். இதோடு அவர்கள் இருவரும் இணைந்து களத்தில் விளையாடும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
- Suresh Raina