ரோகித் சர்மா மற்றும் கம்மின்ஸ் | கோப்புப் படம் 
விளையாட்டு

WTC Final | பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.13.2 கோடி, இரண்டாமிட அணிக்கு ரூ.6.5 கோடி பரிசு!

செய்திப்பிரிவு

துபாய்: எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கான பரிசு தொகை விவரத்தை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். கடந்த 2019-21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதியில் வழங்கப்பட்ட அதே பரிசு தொகைதான் தற்போதும் வழங்கப்படுகிறது. மொத்தம் 3.8 மில்லியன் டாலர்களுக்கு இந்த பரிசு தொகையானது பல்வேறு அணிகளுக்கு வழங்கப்படுகிறது.

வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் விளையாட உள்ளன. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.13.2 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் வழங்கப்பட உள்ளது.

அதேபோல தென் ஆப்பிரிக்க அணிக்கு ரூ.3.7 கோடி, இங்கிலாந்து அணிக்கு ரூ.2.89 கோடி, இலங்கை அணிக்கு ரூ.1.65 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த மூன்று அணிகளும் 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்த அணிகளாகும்.

6, 7, 8 மற்றும் 9-வது இடங்களை பிடித்த அணிகளான நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிக்கு தலா ரூ.82 லட்சம் வழங்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT