விளையாட்டு

காமன்வெல்த்: மாலிக்கு வெண்கலம்

செய்திப்பிரிவு

காமன்வெல்த் ஆடவர் பளுதூக்குதல் (94 கிலோ எடைப் பிரிவு) போட்டியில் இந்தியாவின் சந்த்ரகாந்த் மாலி வெண்கலப் பதக்கம் வென்றார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் மாலி 338 (150+188) கிலோ எடையைத் தூக்கினார். இதேபிரிவில் பப்புவா நியூகினியாவின் ஸ்டீவன் குகுனா தங்கப் பதக்கத்தையும், ஆஸ்திரேலியாவின் சிம்பிளைஸ் ரிபோம் வெள்ளிப் பதகத்தையும் தட்டிச் சென்றனர்.

இவர்கள் இருவருமே தலா 349 கிலோ எடையைத் தூக்கினாலும், குறைவான உடல் எடையின் அடிப்படையில் ஸ்டீவனுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT