விராட் கோலி 
விளையாட்டு

‘அரசன் வர்றார் ஒதுங்கு ஒதுங்கு!’ - சச்சின் முதல் ஏபிடி வரை; கோலியை போற்றிய கிரிக்கெட் ஆளுமைகள்

செய்திப்பிரிவு

சென்னை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் பதிவு செய்தார். இலக்கை 187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய போது இந்த சதத்தை அவர் பதிவு செய்திருந்தார்.

அவரது அட்டகாச இன்னிங்ஸை சச்சின் டெண்டுல்கர் தொடங்கி முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர் யார், யார்? என்ன சொல்லியுள்ளார்கள் என்று பார்ப்போம்.

  • சச்சின் டெண்டுல்கர்: அது விராட் கோலியின் நாள். முதல் பந்தில் அந்த கவர் டிரைவை அவர் ஆடிய போதே அது உறுதியானது.
  • சேவாக்: தனது ஸ்டைலில் ஆறாவது சதத்தை பதிவு செய்துள்ளார் கோலி.
  • யுவராஜ்: அரசனின் எழுச்சி. அப்படியொரு அபாரமான இன்னிங்ஸ் இது. நிச்சயம் இதை பார்ப்பதே ட்ரீட் தான்.
  • சுரேஷ் ரெய்னா: ஆட்டத்தில் தனது கிளாஸ் மற்றும் உறுதியை வெளிப்படுத்தி கோலி பதிவு செய்துள்ள சதம் இது. மெய்யான பேட்டிங் ஜீனியஸ்.
  • ஏபி டிவில்லியர்ஸ்: VIRAAAAAAAAAAAT
  • யூசுப் பதான்: அவரது ஆட்டத்தை பார்ப்பதில் எப்போதும் மகிழ்ச்சியே. வின்டேஜ் மோடில் விராட் கோலி. அற்பத ஆட்டத்தை நாம் பாரத்துள்ளோம்.
  • ரஷீத் கான்: கிங் கோலி! என்னவொரு ஆட்டம்.
  • லிசா: 100 சதவீதம் அரசராக திரும்பியுள்ளார்
  • சஹல்: அண்ணா! என்னவொரு ஆட்டம்.
SCROLL FOR NEXT