லக்னோ: வரும் 20-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிக்கு எதிராக லீக் போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி கொல்கத்தா நகரில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லக்னோ அணி, கால்பந்தாட்ட கிளப் அணியான மோஹன் பகான் அணியின் ஜெர்சியை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த பிரத்யேக ஜெர்சியில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மோஹன் பகான் கால்பந்தாட்ட அணியின் உரிமையாளராக ஆர்பிஎஸ்ஜி குழும தலைவர் சஞ்சீவ் கோயங்கா உள்ளார். அதனால் சிறப்பு ஜெர்சியை அணிந்து லக்னோ அணி விளையாடுகிறது. அதே நேரத்தில் மோஹன் பகான் அணி கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. அந்த அணி ஐஎஸ்எல் கால்பந்து லீகில் விளையாடி வருகிறது. இதில் அந்த அணி நடப்பு சாம்பியனாக திகழ்கிறது.
தற்போது ஏடிகே மோஹன் பகான் என அறியப்படும் கால்பந்தாட்ட அணி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ‘மோஹன் பகான் சூப்பர் ஜெயண்ட்’ என மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று (மே 17) வெளியானது. இதற்கு அந்த அணியின் நிர்வாக உறுப்பினர்கள் அனுமதி அளித்துள்ளனர்.