காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பிரகாஷ் நஞ்சப்பா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் நஞ்சப்பா 198.2 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதேபிரிவில் இங்கிலாந்தின் டேனியல் ரெபசோலி (199.5 புள்ளிகள்) தங்கப் பதக்கத்தையும், மற்றொரு இங்கிலாந்து வீரர் மைக்கேல் கால்ட் (176.5 புள்ளிகள்) வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர்.
அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான ஓம் பிரகாஷ் 9-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றமடைந்தார்.இதன்மூலம் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3-வது பதக்கமும், ஒட்டுமொத்தத்தில் 11-வது பதக்கமும் கிடைத்தது.